• Fri. Sep 29th, 2023

சர்.சி.வி.ராமன் பிறந்த தினம்

Byவிஷா

Nov 7, 2021

தமிழ்நாட்டிலுள்ள திருச்சிராப்பள்ளியில் நவம்பர் 7, 1888 ஆம் ஆண்டு சந்திரசேகர் ஐயர் மற்றும் பார்வதி அம்மா அவர்களுக்கு இரண்டாவது குழந்தையாக பிறந்தார். இந்தியா உருவாக்கிய மிகப் புகழ்பெற்ற விஞ்ஞானிகளுள் ஒருவர், சி.வி. ராமன் ஆவார். அவரது முழு பெயர் சந்திரசேகர வேங்கட ராமன்.


சென்னையில் பிரெசிடென்சி கல்லூரியில் 1902-ம் ஆண்டு சேர்ந்த அவர், 1904-ம் ஆண்டு இளங்கலை பட்டம் பெற்றார். தனது 16-வது வயதில் கல்லூரியில் முதலாவதாக வந்து தங்க பதக்கம் பெற்றார். 1907-ல் முதுகலை பட்டமும் பெற்றார். சி.வி.இராமன் பட்டம் பெற்றதும், அறிவியல் துறை சார்ந்த வேலை வாய்ப்புகள் இல்லாததால், இந்திய அரசுப் பணவியல் துறையில் 1907ல் ஒரு கணக்காயராகச் சேர்ந்தார். என்றாலும் பணியின் கூடவே கொல்கத்தாவில் உள்ள அறிவியல் வளர்ச்சிக் கழகத்தில் ஒளிச்சிதறல் பற்றி செயல்வழி ஆய்வுகள் நடத்தி வந்தார்.


அவரது படைப்புகளில் முன்னோடியான ஒளிச்சிதறலுக்கு, சி.வி. ராமன் அவர்கள் 1930 இல் இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்றார். முழுமையாக இந்தியாவிலேயே படித்து நோபல் பரிசு பெற்ற முதல் இந்திய அறிஞர் என்ற பெருமையைப் பெற்றவர். ஒளி ஒரு பொருளின் ஊடே செல்லும் பொழுது சிதறும் ஒளியலைகளில் ஏற்படும் அலைநீள மாற்றத்தை இவர் கண்டுபிடித்தார். இப்படிச் சிதறும் ஒளியின் அலைநீள மாற்றத்திற்கு இராமன் விளைவு என்று பெயர். இக்கண்டுபிடிப்புக்குத் தான் இவருக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டது. இக்கண்டுபிடிப்பு இன்று பொருள்களின் பல விதமான பண்புகளைக் கண்டறிய (பொருளுக்கு கேடு ஏதும் நேராமலும்) மிகவும் பயனுடையதும் உலகில் புகழ் பெற்றதும் ஆகும். முழுமையாக இந்தியாவிலேயே படித்த ஒரு அறிஞருக்கு நோபல் பரிசு கிடைத்தது முதல் முறையாகும்.


1970-ம் ஆண்டு நவம்பர் 21ல் இந்த மண்ணுலகை விட்டு பிரிந்தார். தன்னுடைய கடைசி காலத்தில் இவரே நிறுவிய இராமன் ஆய்வுக்கழகத்தில் இயக்குநராக பணியாற்றி வந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *