அதிமுக வழக்கில் பொதுக்குழு செல்லும் என்ற நிலை உருவாகியுள்ளதால் ஓபிஎஸ் நீக்கம் உறுதியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
அதிமுக பொதுக்குழு வழக்கில் தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து இபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் இன்று நீதிபதிகள் துரைசாமி, சந்தரமோகன் அமர்வு தனி நீதிபதி அளித்த உத்தரவு செல்லாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதனையடுத்து ஜூலை.11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற நிலை உருவாகியுள்ளது. அதன்படி பார்த்தால் அதிமுகவிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டது செல்லும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.