காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தாயார் மறைவுக்கு ஆசிரியர் கீ.வீரமணி இரங்கல்.
காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தியின் தாயார், பாவ்லா மைனோ உடல்நல குறைவால் ஆகஸ்ட் 27-ஆம் தேதி கடந்த சனிக்கிழமை அன்று இத்தாலியில் உள்ள அவரது வீட்டில் காலமானார்.இவரது மறைவுக்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர் இரங்கல் தெரிவித்திருந்த நிலையில், ஆசிரியர் கீ.வீரமணி இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், மதிப்பிற்குரிய சோனியா காந்தி,
உங்கள் அன்புத் தாயின் மறைவு அறிந்து வருந்துகிறோம்
இந்த துயரத்தில் உங்களையும் இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் திராவிடர் கழகம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது என பதிவிட்டுள்ளார்.