அமமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் வரும் 15ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெறுகிறது என்று டிடிவி தினகரன் அறிவிப்பு. இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் கழக துணைத்தலைவர் எஸ்.அன்பழகன் (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்) அவர்களின் தலைமையில் வரும் 15-ஆம் தேதி திங்கள்கிழமை அன்று காலை 9 மணிக்கு சென்னை, வானகரத்திலுள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் நடைபெற உள்ளது. அனைத்து கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் தங்களுக்கான அழைப்பிதழோடு தவறாமல் வந்து கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.