தமிழக முழுவதும் புதிய மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளை நியமிக்க ஓபிஎஸ் தரப்பு முடிவு செய்துள்ளது.
அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர் செல்வம் அணியினரும் கட்சியை பலப்படுத்தும் பணிகளை தொடங்கி உள்ளனர். அ.தி.மு.க. தலைமை கழக அலுவலகம் தங்கள் கைக்கு கிடைக்காதது பின்னடைவாக இருந்தாலும், சட்ட நடவடிக்கைகள், தேர்தல் ஆணையம் மூலம் கட்சியை கைப்பற்ற ஓ.பன்னீர் செல்வம் தீவிரம் காட்டி வருகிறார்.
தஞ்சாவூரில் 2, கன்னியாகுமரி, தேனி, திருச்சி, பெரம்பலூர் ஆகிய 6 மாவட்ட செயலாளர்கள் மட்டும் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள். எனவே மற்ற மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட செயலாளர்களை ஓ.பன்னீர்செல்வம் நியமித்தார். ஒவ்வொரு மாவட்டத்திலும், பகுதி, வட்ட கழக நிர்வாகிகளை நியமிக்க தீவிரமான கட்சி தொண்டர்களை தேர்வு செய்யும்படி மாவட்ட செயலாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி மாவட்ட செயலாளர்கள் பட்டியல் தயாரித்து வருகிறார்கள். இந்த பட்டியலுக்கு ஓ.பன்னீர் செல்வம் ஒப்புதல் பெற்று விரைவில் வெளியிடப்படும் என்று கூறினார்கள்.