• Thu. Apr 25th, 2024

ஆவடி காவல் நிலையத்தில் மனு அளித்த ஓ.பி.எஸ்..!

Byவிஷா

Jun 21, 2022

அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம் நடத்த அனுமதிக்க கூடாது – ஆவடி காவல் ஆணையருக்கு ஓ.பி.எஸ் மனு அளித்திருப்பது அ.தி.மு.க.வினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு, இரட்டைத் தலைமையுடன் இவ்வளவு நாட்கள் சுமூகமாக சென்று கொண்டிருந்த அதிமுக கட்சிக்குள் இப்போது, ஒற்றைத் தலைமை என்ற கோரிக்கை, வெடிக்கத் துவங்கி உள்ளது. அந்த ஒற்றை தலைமை ஓ.பன்னீர்செல்வமா அல்லது எடப்பாடி பழனிசாமியா என்பது தான் இப்போது அதிமுக தொண்டர்களின் மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.
அதிமுக செயற்குழு, பொதுக் குழுக் கூட்டம் ஜூன் 23-ஆம் தேதி சென்னையை அடுத்த வானகரத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் கட்சியில் தற்போது வெடித்துள்ள ஒற்றை தலைமை என்ற விவகாரம் நாளுக்கு நாள் பெரிதாகிக்கொண்டு போகிறது. இந்த விவரகாரம் தொடர்பாக ஓபிஎஸ், இபிஎஸ் தனித்தனியாக தொடர்ந்து 8 வது நாளாக ஆலோசனை செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று பேட்டி அளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஒற்றை தலைமை வேண்டும் என்று தான் சொல்கிறோம். யார் தலைமையேற்க வேண்டும் என்று கூறவில்லை என்று கூறினார்.
மேலும் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தை தற்போதைக்கு தள்ளி வைக்க வேண்டும்” என்று எடப்பாடி பழனிசாமிக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார் என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் நேற்று கூறினார். இந்நிலையில் எடப்பாடி பழனிசாமிக்குத்தான் கட்சியில் அதிகம் ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஒ.பன்னீர்செல்வத்திற்கு 30 மாவட்ட செயலாளர்கள் ஆதரவு அளித்துள்ளதாக மூத்த நீர்வாகி வைத்தியலிங்கம் நேற்று கூறினார்.

இந்நிலையில் அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி ஈரோடு முன்னாள் நிர்வாகி தொடர்ந்த வழக்கில், ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பதிலளிக்க சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் வழக்கின் விசாரணை நாளைய தினத்திற்கு ஒத்திவைப்பட்டுள்ளது. மேலும் ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிச்சாமி வர வேண்டும் என பொள்ளாச்சி ஜெயராமன் கூறியுள்ளார். மேலும், கட்சி சிறப்பாக செயல்பட ஒற்றைத் தலைமை வேண்டும் என திருப்பூர் மாவட்ட அதிமுக சார்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் அவர் நேற்றைய தினத்தில் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *