பிரபல ஆங்கில நாளிதழில் அளித்துள்ள விளம்பரம் மூலம் தனதுசாதனைகளை வெளிபடுத்தி மிரட்டும் ஓபிஎஸ்.
செஸ்ஒலிம்பியாட் போட்டி, அண்ணாபல்கலை பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள சென்னை வருகை புரிந்துள்ளமோடியை ஓபிஎஸ்,இபிஎஸ் இருவரும் தனித்தனியாக சந்திக்க உள்ளனர். இந்நிலையில் ஓபிஎஸ் தன் சாதனைகளை பட்டியலிட்டு பிரபல ஆங்கில நாளிதழில் 2 பக்க விளம்பரம் அளித்துள்ளார். அதற்கு” புரட்சித்தலைவியின் உண்மையான விசுவாசி” என தலைப்பிடப்பட்டுள்ளது. அந்த விளம்பரத்தில் ஆட்சியை காப்பாற்றி மீண்டும் ராமனிடம் ஒப்படைத்த பரதன்(ஓபிஎஸ்) படமும் ஜெ.மற்றும் மோடி உடன் ஓபிஎஸ் இருக்கும் புகைப்படங்களும் இடம் பெற்றுள்ளன.திடீரென ஓபிஎஸ்இப்படி விளம்பரம் வெளியிட காரணம் என்னவாக இருக்கும் என இபிஎஸ் தரப்பில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.