• Sat. Jul 18th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

தொல்லியல் களமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டுமென கோரிக்கை..,

ByP.Thangapandi

Jul 18, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பாப்பநாயக்கன்பட்டி- சங்கரலிங்கபுரம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியான சலுப்பான்கரடு,ஓணான் கரடு, பெருமாள் மலை பகுதிகளில் பேராசிரியர் தேவி அறிவுச் செல்வம் தலைமையிலான குழுவினர் மற்றும் கிராம மக்களுடன் சேர்ந்து கள ஆய்வு மேற் கொண்டனர்.

இதில் சலுப்பான்கரடு பகுதியில் முதுமக்கள் தாழி பானைகள் மூன்று இடங்களிலும் கண்மாய் பகுதியில் ஒரு முதுமக்கள் தாழி பானையும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சுமார் 2000 முதல் 3000 ஆண்டுகள் பழமையான சிவப்பு கருப்பு நிறத்தில் பானை ஓடுகள் கிடைத்துள்ளது.

இந்த தாழி பானையின் சிறப்பு நினைவு சின்னம் என கூறலாம், இதில் இறந்தவர்களின் எழும்புகள், அவர்கள் பயன்படுத்திய பொருட்களை வைத்து புதைக்கப்பட்டுள்ளது எனவும்.,

எலும்புகள் கிடைத்துள்ள இந்த பகுதியை ஈமு காடுகள் என கூறப்படுகிறது. இந்த பகுதியில் மூன்றுக்கும் மேற்பட்ட தாழி பானைகள் கிடைத்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக மலை அடிவாரத்தில் ஓணான் கரடு, பெருமாள் மலை பகுதிகளில் தொல்காப்பியத்தில் குறிப்பிட்டது போல் கிமு 7ம் நூற்றாண்டை சேர்ந்த தொல்காப்பியத்தில் குறிப்பிட்டிருக்கிற காட்சி என்ற அமைப்பின் தடயமும் இந்த பகுதியில் காண முடிகிறது.

அதனை தொடர்ந்து 800 ஆண்டுகள் பழமையான நடுகல், 500 வருட பழமையான சதிகல்-லும் காணப்படுகிறது.

தொடர்ச்சியாக இந்த பகுதியில் வாழ்விட பகுதியாக இருந்ததற்கான சான்றுகளாக இருக்கலாம் எனவும்,. இந்த பகுதியை தொல்லியல் களமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.