

கடந்த 18-ம் தேதி நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகள் 22ம் தேதி எண்ணப்பட்டன. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்மு 64 சதவீத வாக்குகளை பெற்று அமோக வெற்றி பெற்றார். இதையடுத்து நாட்டின் 15-வது குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு ஜூலை 25ஆம் தேதி பதவியேற்றார் பதவியேற்றார். அதுமட்டுமின்றி நாட்டின் மிக உயர்ந்த பதவியை வகிக்கும் முதல் பழங்குடியினப் பெண்மணி இவர் என்ற பெருமையும் இவர் பெற்றிருக்கிறார்.
தொடர்ந்து ஓபிஎஸ் மகனும் தேனி எம்.பியுமான ஓ.பி. ரவிந்திரநாத், குடியரசு தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்ற இந்திய குடியரசு தலைவர் திரெளபதி முர்மு அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். ஆங்கிலேயர்கள் ஆதிக்கத்தை எதிர்த்து போராடிய இந்தியாவின் முதல் பெண் விடுதலைப் போராட்ட வீரமங்கையான இராணி வேலுநாச்சியார் திருவுருவப்படத்தையும் நினைவு பரிசாக வழங்கி சிறப்பித்துள்ளார்.
