• Wed. Apr 24th, 2024

ஆசிரியர் பணியினை பற்றி  பொய்யான கருத்து தெரிவித்த அமைச்சர் பேசசிற்கு  எதிர்ப்பு

ஆசிரியர் பணியின் பற்றியும் அவருடைய ஊதியம் பற்றியும் தவறான பொய்யான கருத்து தெரிவித்த தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் பேசியதற்கு நாங்கள் கடுமையாக எதிர்ப்பை தெரிவித்துள்ளார் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் மயில்.

 

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி மாநில செயற்குழு கூட்டம் மதுரை சங்கத்தின் மாவட்ட அலுவகத்தில் மாநில தலைவர் மணிமேகலை அவர் தலைமையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இந்த ஆலோசனை கூட்டத்தில் அதன் பொதுச்செயலாளர் மயில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் இந்த மாநில செயற்குழு கூட்டத்தில் முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன இதில் தமிழகம் முழுதும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அனைத்து நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

பின்னர் அதன் பொதுச்செயலாளர் மயில் செய்தியாளர் கூறும்போது கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதியன்று கடலூரில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் ஆசிரியர் பணியும் பற்றியும் அவருடைய ஊதியம் பற்றியும் தவறான பொய்யான கருத்துக்களை தெரிவித்த தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் அவருடைய பேசியதற்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தன்னுடைய கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கிறது ” அதேபோல் கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கொரோனா தோற்று காரணமாக விடுமுறை விடப்பட்ட ஒரு பள்ளியில் சென்று அந்த பள்ளி தலைமையாசிரியரிடம் ஆசிரியர்களைப் பற்றி கண்ணியக் குறைவான வார்த்தைகள் பேசியதற்கு எங்களுடைய மாநில செயற்குழு கடுமையாக எதிர்க்கிறது சமீபகாலமாக ஆசிரியர் பணிகள் பற்றி ஊதியம் தவறான பொய்யான அவதூறான கருத்துக்களை அரசின் உயர் பொறுப்பில் இருப்பவர்கள் பேசிவருவது தமிழ்நாடு ஆசிரியர் சமுதாயத்தின் மற்றும் மிகப்பெரிய மனவருத்தத்தில் ஏற்பட்டுள்ளது

எனவே தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு இது போன்ற நிகழ்வுகள் இனியும் நடக்காத அளவில் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். அதேபோன்று தமிழக அரசு சட்டமன்றத்தில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஊக்க ஊதியம் என்பது மத்திய அரசின் ஒன்றிய அரசின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வழங்கப்படும் என்று சொல்லி இருக்கின்றார்கள் அவ்வாறு வழங்காமல் ஏற்கனவே கடந்த 50 ஆண்டு காலமாக தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு இவ்வாறு ஊக்க ஊதியம் உயர்கல்விக்கு வழங்கினார்கள் அவர் கூறினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *