• Mon. Dec 9th, 2024

தமிழகம் உள்ளிட்ட 11 மாநிலங்களுக்கு வேகமாக பரவும் டெங்கு – மத்திய அரசு எச்சரிக்கை

கொரோனா மூன்றாம் அலை இப்போது தொடங்குமோ எப்போது தொடங்குமோ என்ற பயம் மக்கள் மனதில் ஒரு பக்கம் இருக்க, தற்போது செரோடைப் – 2 வகை டெங்கு காய்ச்சல் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட 11 மாநிலங்களில் அதிகளவில் பதிவாகி உள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இந்த வகை வைரஸ் வேகமாக பரவுவதுடன், அதிகளவு பாதிப்புகளை ஏற்படுத்தும் எனவும் எச்சரித்துள்ளது.

இவ்வகை டெங்கு வைரஸ் பரவலை தொடக்கத்திலேயே தடுத்து நிறுத்த தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளார் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் .