• Fri. Apr 26th, 2024

அன்று கருணாநிதி எதிர்ப்பு – இன்று ஸ்டாலின் ஆதரவா?

ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கும் பணத்துக்கு பதிலாக பாண்டு பத்திரம் வழங்குவதை அன்று கருணாநிதி கடுமையாக எதிர்த்தார்.


ஆனால் இன்றைக்கு ஆட்சியிலிருக்கும் ஸ்டாலின் பணத்திற்கு பதிலாக பாண்டு பத்திரம் வழங்க இருப்பதாக வெளிவரும் தகவல்களால் அரசு ஊழியர்கள் அதிர்ச்சியில் அடைந்திருக்கிறார்கள்.
அரசு ஊழியர்கள் ஓய்வு பெறக்கூடிய வயது கடந்த ஆட்சியில் இருந்து 59 ஆக நீட்டிக்கப்பட்டது. நிதி பற்றாக்குறையின் காரணமாகத் தான் இந்த வயது நீட்டிக்கப்பட்டது. திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் 59 வயதை 60 ஆக உயர்த்தி அரசாணை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின். இதனால் அரசு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.

இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்க காலியிடங்களை நிரப்ப அரசு தவிர்த்து வருகிறது. ஆனால் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தி இருக்கிறது என்று அதிர்ச்சி அடைந்தனர். இதனால் கடும் விமர்சனங்களும் எழுந்தன. ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு பணப்பலன் கொடுக்க வேண்டிய காரணத்தினால்தான், தற்போது அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்றால் 4 ஆயிரம் கோடிக்கு மேல் பணம் வேண்டும். இருக்கும் நிதிச்சுமையில் இது எப்படி சாத்தியம்? அதனால்தான் ஓய்வு பெறும் வயது உயர்த்தப்பட்டுள்ளது.

வரும் ஜனவரி மாதம் ஐந்தாம் தேதி கூட இருக்கும் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை தொடர்பாக புதிய அறிவிப்பு வெளியிடப்படலாம் என்று தகவல் பரவுகிறது. அதாவது 33 வருடங்கள் அரசு பணி செய்தவர்கள் 58 வயதிலும் மற்றவர்கள் 60 வயதிலும் ஓய்வு பெறலாம் என்று அறிவிக்கப்படலாம் என தகவல்.

நிதிப் பற்றாக்குறையினால் தான் அரசு ஊழியர்களின் பணி ஓய்வு வயதை உயர்த்தியது. தற்போது ஓய்வு பெறும் வயது 58 குறைத்தால் பல ஆயிரம் பேர் ஓய்வு பெறுவார்கள் அவர்களுக்கு பணப்பலன் எப்படி கொடுப்பது என்பது கேள்விக்குறி. அப்படி ஒரு சூழ்நிலை வரும்போது அனைவருக்கும் பழையபடி பாண்டு பத்திரம் கொடுத்து அனுப்ப முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது என்று தலைமைச் செயலக வட்டாரத்தில் இருந்து தகவல் கசிகிறது.

பணத்துக்கு பதிலாக பாண்டு பத்திரம் கொடுக்க அரசு முடிவு எடுத்துள்ளதாக வரும் செய்திகளால் அரசு ஊழியர்கள் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகி இருக்கின்றனர். கடந்த 2003 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு பணத்துக்குப் பதிலாக பாண்டு பத்திரம் வழங்குவதை கருணாநிதி கடுமையாக எதிர்த்தார் . ஆனால் இன்றைக்கு ஸ்டாலின் அன்று அதிமுக செய்ததையே இன்றைக்கும் செய்தால் ஒட்டுமொத்த அரசு ஊழியர்களின் குடும்பங்களும் அரசுக்கு எதிராக போராட்டத்தில் இறங்கும் என்று தெரிகிறது. இந்த போராட்டம் அடுத்து வரும் தேர்தலில் எதிரொலிக்கும் என்பதால், அதை எல்லாம் கவனத்தில் கொண்டுதான் முதல்வர் ஒரு முடிவு எடுப்பார் என்றும் பரபரப்பு பேச்சு எழுந்திருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *