
காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்து அடைந்தார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது:
அஜித் குமார் விவகாரத்தில் முதல்வர் முழு பொறுப்பேற்க வேண்டும் என நைனார் நாகேந்திரன் கூறியது குறித்து கேள்விக்கு:

அஜித் குமாரின் கொலை என்பது மாபெரும் பாதக செயலாகும், கண்டனத்திற்குரியதாகும். காவல் துறையை சார்ந்த சிலர் இதுபோல காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்டு. ஒரு கொலை செய்திருப்பது, அதற்கான சரியான கூடுதலான தண்டனையை அவர்கள் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கைது செய்யப்பட்டுள்ளார்கள், வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளார். இது போன்ற சம்பவங்கள் நடக்கக் கூடாது என்பது ஏற்றுக்கொள்ள வேண்டிய விஷயம் தான், அதே நேரத்தில் இது மாதிரி நடக்கும் சம்பவங்களை வைத்து முற்றிலுமாக முதல்வர் தான் பொறுப்பு என்று குற்றம் சாட்டி முதல்வரை தரகுறைவாக பிரசங்கம் செய்வது எதிர்க்கட்சிகள் செய்வதுதான். எல்லா மாநிலங்களிலும் மாறுபட்ட ஆட்சிகள் உள்ளது.
இந்தியாவில் பல மாநிலங்களில் பிஜேபி ஆட்சி உள்ளது. இதுபோன்று பிஜேபி ஆளும் மாநிலத்தில் காவல்துறை அத்துமீறலோ, கொலையோ, தாக்குதலோ நடந்தால் அதற்காக அந்த முதல்வரை பொறுப்பேற்க வைத்து ராஜினாமா செய்ய வைத்து வழக்கு போடுகிறார்களா. நைனார் நாகேந்திரன் ஆட்சியில் இல்லாத கட்சி சார்பாக பேசினால் பரவாயில்லை, பாரதத்தில் பல மாநிலங்களில் இருக்கும் பாஜகவின் மாநில தலைவர். எனவே அவர் முதல்வரை நோக்கி ஒரு விரலை நீட்டும் போது, அவர்கள் ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் மீது விரல் நீட்டப்படும் என்பதை அவர் கவனத்தில் கொள்ள வேண்டும். இனி இது போன்ற சம்பவம் நடக்காமல் காவல்துறை விழிப்போடு செயல்பட வேண்டும்.
பாஜக உடன் கூட்டணி இல்லை என விஜய் கூறியிருப்பது மற்ற கட்சிகளுக்கான மறைமுக அழைப்பா என்ற கேள்விக்கு:

அவரைப் பொறுத்தவரை அவர் கருத்தை சொல்லி இருக்கிறார். பிஜேபி கூட்டணியுடன் செல்ல மாட்டோம் என்று சொல்லி இருக்கிறார். இது பிஜேபி எதிரான கட்சிகளுக்கான அழைப்பை என்று சொல்ல முடியாது. இன்னும் ஏழு எட்டு மாதங்கள் தேர்தலுக்கு உள்ளது. காங்கிரசைப் பொருத்த அளவில் காங்கிரஸ் ஏற்கனவே கூட்டணியில் உள்ளது. வரக்கூடிய ஏழு எட்டு மாதங்களில் அதிமுக- பாஜக கூட்டணி அப்படியே இருக்குமா உடையுமா என்று சொல்ல முடியாது. முழுமையாக செட்டில் ஆனதாக தெரியவில்லை. முதல்வர் யார், யார் தலைமையில் கூட்டணி என்று குழப்பமாக பேசி வருகிறார்கள். திமுக- காங்கிரஸ் கூட்டணி தெளிவான கூட்டணி ஏற்கனவே வெற்றிகளை பெற்றுள்ள கூட்டணி அதில் பெரும்பான்மையான இடங்களில் திமுக போட்டியிடுகிறது. தளபதி ஸ்டாலின் தான் முதல்வர். கூட்டணியில் இடம் வேண்டும் என கட்சிகள் யாரும் ஆசை விருப்பத்தை சொல்லியிருக்கலாமே தவிர அதை நிர்பந்தமாகவோ கண்டிஷன் ஆகவோ காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வைத்ததில்லை. இந்த கூட்டணி தெளிவாக உள்ளது காங்கிரஸ் கூட்டணி அங்கே செல்லுமா என்ற கேள்வியே இல்லை.
கூடுதல் இடங்கள் மற்றும் அமைச்சரவையில் இடம் கேட்கப்படுமா என்ற கேள்விக்கு:
25 இடங்கள் ஏற்கனவே இருப்பது தான் அதில் தான் 18 வெற்றி பெற்றோம். இந்த சீட்டை குறைக்க சொல்லி கேட்க மாட்டோம். அதற்கு மேல் ஆசைப்படுவது தவறு இல்லை. கூட்டணி இறுதியாகும் போது பேசி முடிவு செய்ய வேண்டிய விஷயம். அதில் நிர்பந்தமோ, கண்டிஷனா இல்லை. இதற்கு முன்பு காங்கிரஸ் 35 இடங்களில் வெற்றி பெற்று, திமுக நூறு இடங்களுக்குள் வெற்றி பெற்று கூட்டணி இருக்கும்போதே அமைச்சர் அவையில் சேராமல் ஆதரவு கொடுத்துள்ளது. காங்கிரஸ் கூட்டணியில் கண்டிப்பாக அமைச்சரவையில் இடம்பெற்றே ஆக வேண்டும் என்கிற நிர்பந்தத்தை காங்கிரஸ் வைக்காது வைக்கவில்லை.
திருப்பூர் ரிதன்யா விவகாரத்தில் மறைமுகமாக காங்கிரஸ் ஆட்டம் கொடுக்கிறதா என்ற கேள்விக்கு:
மாவட்ட தலைவர் உறவினர் குடும்பம் சம்பந்தப்பட்டதாக இருக்கலாம். அதற்கு அவரை எப்படி சம்பந்தம் உண்டு என்று சொல்ல முடியும். காங்கிரஸ் ஆட்சியிலா உள்ளது அல்லது எங்கள் கூட்டணியில் திமுக ஆட்சியில் இருந்தாலும், அவர்களுக்கு மதம், ஜாதி, கட்சி பார்க்க வேண்டியதில்லை. குற்றவாளியை குற்றவாளியாக தான் பார்க்க வேண்டும். அது யாராக இருந்தாலும் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதில் மற்றவர்கள் தலையிட்டார் என்பதெல்லாம் யோகம் தானே தவிர அப்படி தலையிட்டாலும் அந்த நிர்பந்தத்திற்கெல்லாம் யாரும் அணிய வேண்டிய அவசியம் இல்லை பணியவும் மாட்டார்கள் அப்படி காங்கிரஸ் மாவட்ட தலைவரோ மாநில அளவில் தலையிடவும் இல்லை தலையிடவும் மாட்டார்கள்.
இன்றைய அரசியல் சூழலில் எந்தக் கட்சியாலும் தனிப்பெரும்பான்மையில் ஆட்சி அமைக்க முடியுமா:
இது கூட்டணி யுகம் அதற்கான காலம் என்று சொல்லலாம். நிச்சயமாக கூட்டணி தேவைப்படுகிறது. யார் தலைமையிலான கூட்டணி, திமுக தலைமையிலான கூட்டணியாக இருந்தாலும் சரி, டெல்லியில் கூட காங்கிரஸ் தலைமையிலான பாராளுமன்ற கூட்டணி இருந்தாலும் சரி, பாஜக தலைமையிலான கூட்டணியாக இருந்தாலும் சரி, எங்கு இருந்தாலும் கூட்டணி கட்சியாக ஆளுகின்ற காலமாக ஆகி இருக்கிறது. கூட்டணி அமைந்து தேர்தல் முடிவு வரும் போது, அதில் இருக்கக்கூடிய பெரிய கட்சி எத்தனை இடங்களில் அறுதி பெரும்பான்மை பெறுகிறதா அல்லது கூட்டணி கட்சியை சேர்ந்த ஆட்சி அமையும் சூழல் உள்ளதா என்று பொறுத்து தான் கூட்டணி ஆட்சியா தனித்து ஆட்சியா என்ற தேர்தலுக்குப் பின்பு தான் தெரியவரும்.
பெரிய கட்சியாக இருக்கக்கூடிய மாநில கட்சி அதிக பெரும்பான்மை பெற்றாலும் கூட அங்க இருக்கக்கூடிய கட்சிகளுக்கு ஒரு சில அமைச்சரவை கொடுக்கும் மாநிலங்களும் கட்சிகளும் உள்ளது. ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு பெரும்பான்மையாக இருந்தாலும் கூட்டணி கட்சிக்கு முந்திரி பதவி கொடுத்திருக்கிறார். மேற்கு வங்காளத்தில் மம்தா அல்லது கம்யூனிஸ்ட் மெஜாரிட்டி வரும்போது ஃபார்வேர்ட் பிளாக் போன்ற கட்சிகளுக்கு பகிர்ந்து கொடுத்து வைத்திருக்கிறார்கள் இதுபோல பல கால கட்டங்களில் நடந்துள்ளது. காங்கிரஸ் பெரும்பான்மை விற்றபோது கூட முஸ்லிம் லீகுக்கு அமைச்சரவை கொடுத்த உள்ளார்கள்.
அது வெற்றி வாய்ப்பை பொறுத்தது. தமிழ்நாட்டை பொறுத்த அளவில் ஏற்கனவே திமுக அதிக பெரும்பான்மை பெற்றிருக்கிறது. தனியாக தான் அவர்கள் ஆட்சி நடத்துகிறார்கள். தேர்தலில் கூட்டணியாக நாங்கள் நின்றாலும், வெற்றி பெற்ற பிறகு அவர்கள் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். இந்த முறையும் அந்த கட்சி பெரும்பான்மையாக இடங்களில் நின்று பெரும்பான்மை பெறக்கூடிய வாய்ப்பு திமுகவுக்கு இருக்கிறது என கூறினார்.
