
மதுரை டூ திருமங்கலம் புறநகர் நான்கு வழிச்சாலையில் நிலையூர் முனியாண்டிபுரம் கிராமத்தை சேர்ந்த கந்தன் மகன் அழகு (28) என்ற இளைஞர் தனது இரு சக்கர வாகனத்தில் தனது அக்கா பசங்களை ஏற்றிக்கொண்டு பெட்ரோல் நிரப்புவதற்காக நான்கு வழிச்சாலையில் சென்றுள்ளார்.

இந்த நிலையில் மூவரும் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் எதிர்பாராத விதமாக டூவீலர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கீழே விழுந்த அழகு தலையில் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.மேலும் அழகுடன் இருசக்கர வாகனத்தில் வந்த அவரது அக்கா பசங்கள் 13,14 வயது சிறுவர்கள் அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.
இதனைக் கண்ட அருகில் உள்ளவர்கள் உடனே ஆம்புலன்ஸ் தகவல் தெரிவித்தனர் விரைந்து வந்த ஆம்புலன்ஸ் உயிரிழந்த அழகு (28) உடலை மீட்டு பிரேத பரிசோதனை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் தகவல் அறிந்து வந்த ஆஸ்டின்பட்டி போலிசார் விபத்தில் சிக்கிய சிறுவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் பின்னர் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் நிரப்புவதற்காக சென்ற இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
