
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலக கட்டிடம் 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.
கடந்த சில ஆண்டுகளாக எம்எல்ஏ அலுவலக கட்டிடம் சிதிலமடைந்து மேற்கூரை இடிந்து விழுந்து வந்தது.

கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு எம்எல்ஏ மேசைக்கு நேராக இருந்த மேற்கூரை இடிந்து வீழுந்தது – அலுவலகத்தில் எம்எல்ஏ அய்யப்பன் இல்லாததால் எந்த பாதிப்பும் இல்லை.
இந்த நிலை குறித்தும், புதிய சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் கட்டித்தர கோரி தொடர் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்நிலையில் எம்எல்ஏ நிதி 21 லட்சம், தமிழ்நாடு அரசின் நிதி 49 லட்சம் என 70 லட்சத்தில் புதிய கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டது.
பழைய கட்டிடம் இடிக்கப்பட்டு, இன்று உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன் தலைமையில் புதிய கட்டிடம் கட்ட பூமி பூஜை செய்து பணிகள் துவங்கப்பட்டது.
