சேலம் மாவட்டம், புத்திர கவுண்டம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் அதிமுகவை சேர்ந்த சிவகாமி முனிராஜ். இவர் ஊராட்சி மன்ற தலைவராக பொறுப்பேற்ற போது அப்போதைய முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி, மாநில கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன், ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜெய்சங்கரன், ஊராட்சி மன்ற தலைவர், துணைத் தலைவர், உறுப்பினர்கள் ஆகியோரது பெயர்களை ஊராட்சி மன்ற அலுவலகத்தின் வெளியே நுழைவுவாயிலில் எழுதி உள்ளார்.
தற்போது ஆட்சிமாற்றத்தைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பெயரை நீக்க வேண்டும் என சிவகாமி முனிராஜிடம், ஏத்தாப்பூர் திமுக நகரச் செயலாளர் சோமசுந்தரம் மற்றும் திமுகவினர் சிலர் மிரட்டல் விடுத்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஊராட்சி மன்றத் தலைவர்கள் அரசாணை இருந்தால் அழித்து விடுகிறோம் என்றதைத் தொடர்ந்து இரு தரப்பினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.