

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 46பேர் காயமடைந்தனர். வீரர் ஒருவர் உயிரிழந்தார்.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 500 மாடுபிடி வீரர்களும். 827 ஜல்லிக்கட்டு காளைகளும் பங்கு பெற்றன. சிறந்த காளைக்கு மலையாண்டிக்கு முதல் பரிசு டிராக்டர் வழங்கப்படுகிறது .

சிறந்த மாடுபிடி வீரருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் 2ம் பரிசாக GR கார்த்திக் வேலு மோட்டார் பைக், 3ம் பரிசாக காளை தேர்வு பெற்றது.
சிறந்த மாடுபிடி வீரர் 1வது பரிசு திருப்பரங்குன்றம் கார்த்திக் 19 காளை பிடித்த துணை முதல்வர் கார் வழங்கப்பட்டது. 2 வது பரிசாக 15 காளை பிடித்த திவாகருக்கு வழங்கப்பட்டது. 3வது பரிசு வழங்கப்பட்டது.

உலகப் புகழ்பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை ஆறு முப்பது மணிக்கு தொடங்கியது. ஜல்லிக்கட்டு போட்டியை வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மதுரை மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார் ஆகியோர் கொடியசைத்து துவங்கி வைத்தனர்.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த 1200 காளைகளும் 900 மாடு பிடி வீரர்களும் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கான டோக்கன் வழங்கப்பட்டது.
போட்டியில் பங்கேற்பதற்காக வந்த 895 காளைகளில் மருத்துவ பரிசோதனையில் 37 காளைகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது. மீதமுள்ள 858 மாடுகள் களம் கண்டது
.இதேபோல் போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கான மருத்துவ பரிசோதனை மதுரை மாநகராட்சி ஆரம்பப் பள்ளியில் நடைபெற்றது.

இன்றைய போட்டியில் பங்கேற்க 629 வீரர்கள் வந்திருந்த நிலையில் அவர்களுக்கான மருத்துவ பரிசோதனையில் மது அருந்தியது, உடல் தகுதியின்மை உள்ளிட்ட காரணங்களுக்காக 29 வீரர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.
ஒரு சுற்றுக்கு 50 வீரர்கள் வீதம் 12 சுற்று நடத்துவதற்கு வசதியாக 600 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டிருந்த நிலையில் நேரமின்மை காரணத்தால் 10 சுற்றுக்களோடு போட்டி நிறுத்தப்பட்டது. 11வது இறுதி சுற்றில் 10 போட்டிகளில் கலந்து அதிக மாடுகளை பிடித்த 30 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு இறுதி போட்டி நடைபெற்றது.
இதன் காரணமாக இன்றைய ஜல்லிக்கட்டு போட்டியில் 500 வீரர்கள் மட்டுமே பங்கேற்றனர் மீதமுள்ள 100 வீரர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.இந்த நிலையில் காலையிலிருந்து போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.
முதல் மாடுபிடி வீரர்கள் 21 பேர், நாட்டு உரிமையாளர்கள் 17 பேர்,பார்வையாளர்கள் ஆறு பேர்,காவலர் பத்திரிக்கையாளர் உட்பட இரண்டு பேர் என மொத்தம் 46 பேர் காயமடைந்தனர்.

ஜல்லிக்கட்டில் பலத்த காயமடைந்த12 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் ஒன்பதாவது சுற்றில் பங்கேற்ற மதுரை விளாங்குடி சொக்கநாதபுரத்தை சேர்ந்த நவீன் (வயது23) களத்தில் இருந்தபோது காளை மாடு நெஞ்சில் முட்டியதில் பலத்த காயமடைந்து முதலுவி மையத்தில சிகிச்சைக்கு பின் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

