மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நலக்குழு சார்பில் மாடு பிடி வீரர்கள், மாட்டின் உரிமையாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட 4 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கப்பட்டது.
மதுரை அவனியாபுரத்தில் தைத்திங்கள் முதல் நாளான இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பாக, ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றாலும் பார்வையாளர்கள் மறுபடி வீரர்கள் மற்றும் பொதுமக்களுக்கு குடிநீர், சாப்பாடு போன்றவற்றில் தட்டுப்பாடு ஏற்பட்டது.


மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நலக்குழு சார்பில்கடந்த நான்கு ஆண்டுகளாக ஜல்லிக்கட்டுக்கு வரும் மாடுபிடி வீரர்கள் மாட்டின் உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று காலை 10 மணியளவில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் விஜயன் தலைமையில் உணவு வழங்கப்பட்டது. ஜல்லிக்கட்டு நலக்குழு உறுப்பினர்கள் ஆசைத்தம்பி, விஜயன் . லெனின் , புரட்சி, ராஜமாணிக்கம் உள்ளிட்டோர் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு உணவு வழங்கினர்.

