• Thu. Apr 24th, 2025

கல்வி ஆராய்ச்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரி விளையாட்டு விழாவில் ஒலிம்பிக் ஜோதி பேரணி…

ByS.Navinsanjai

Mar 21, 2025

அவிநாசிபாளையத்தில் திருப்பூர் கல்வி ஆராய்ச்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் நடைபெற்ற விளையாட்டு விழாவில், காவல் நிலைய ஆய்வாளர் ஒலிம்பிக் ஜோதி பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசிபாளையம் TERF’S அகாடமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விளையாட்டு விழா இன்று நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரியின் இயக்குனர் கிருஷ்ணவேணி தலைமை தாங்கினார்.

சிறப்பு அழைப்பாளராக அவிநாசிபாளையம் காவல் நிலைய ஆய்வாளர் கோவர்தனாம்பிகை கலந்து கொண்டு ஒலிம்பிக் ஜோதி பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். அவிநாசிபாளையத்தில் இருந்து கல்லூரி வரை ஒலிம்பிக் ஜோதி மாணவர்களால் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது.

தொடர்ச்சியாக கபடி, கிரிக்கெட், கால்பந்து, ஈட்டி எறிதல், குண்டு எறிதல் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட போட்டிகள் பல சுற்றுகளாக நடத்தப்பட்டு வெற்றியாளர்களுக்கு கல்லூரியின் கல்வி ஆலோசகரும், கோவை பிஎஸ்ஜி டெக்னாலஜிஸ் இயக்குனர் மற்றும் விளையாட்டு சங்க தலைவருமான ருத்ரமூர்த்தி பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.