தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் அக்டோபர் 6 மற்றும் 9ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. இதற்க்கான பணிகளை அரசியல் கட்சிகள் பரபரப்பாக செய்து வருகிறது.
அந்த வகையில், நெல்லை மற்றும் தென்காசி பகுதி வேட்பாளர்களை அறிமுகம் செய்து, அவர்களுக்காக பிரச்சாரம் செய்ய அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் திரு. ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் இன்று தூத்துக்குடிக்கு வருகை தந்தார். அப்போது விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் சிறப்பான வரவேற்ப்பு வழங்கப்பட்டது. மேலும் திருவில்லிபுத்தூர் எம். எல். ஏ மான்ராஜ், சாத்தூர் முன்னாள் எம்.எல்.ஏகள் ராஜவர்மன், எதிர்கோட்டை சுப்பிரமணியன் மற்றும் கட்சி நிருவாகிகள் கலந்துகொண்டனர்.