• Sat. Dec 3rd, 2022

நவ. 11-ல் பிரதமர் மோடி திண்டுக்கல் வருகை

ByA.Tamilselvan

Oct 27, 2022

திண்டுக்கல் காந்திகிராம கிராமிய பல்கலைக்கழக 36-வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்டு பட்டங்களை வழங்குகிறார்.
திண்டுக்கல்-மதுரை 4 வழிச்சாலையில் காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் 13-ந்தேதி 35-வது பட்டமளிப்பு விழா நடந்தது. அந்த விழாவில் அப்போதைய மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாந்த் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். அதன் பிறகு கொரோனா கட்டுப்பாடுகளால் கடந்த 3 ஆண்டுகளாக காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெறவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு பல்கலைக்கழகத்தின் 36-வது பட்டமளிப்பு விழா நவம்பர் 11-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *