

சென்னையில் நடந்த போதைப்பொருட்கள் தடுப்பு ஆய்வுக்கூட்டத்தில் பேசிய ஸ்டாலின் ” என்னையாரும் சாஃப்ட் முதலமைச்சர் என நினைக்கவேண்டாம்” என பேசியுள்ளார்.
போதைப்பொருட்கள் தடுப்பு ஆய்வுகூட்டம் சென்னையில் நடைபெற்றது. அதில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “என்னையாரும் சாஃப்ட் முதலமைச்சர் என நினைத்துவிட வேண்டாம். நேர்மையானவர்களுக்கு மட்டும் தான் நான் சாஃப்ட் ,போதை பொருள் நடமாட்டத்திற்கு துணை போனால், சர்வாதிகாரியாக மாறுவேன் என்று எச்சரித்துள்ளார். இதற்கு முன்பு திமுக உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் ஒழுங்கீனம், முறைகேடும் தலைதூக்கினால் சர்வாதிகாரியாக மாறுவேன் என்று முதல்வர் எச்சரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
