• Sun. Sep 6th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

அதிமுக பிளவை கடந்து ஒன்றிணையும்.. சசிகலா உறுதி..

Byகாயத்ரி

Aug 10, 2022

அதிமுகவின் முதல் மக்கள் பிரதிநிதியும் இரட்டை இலை சின்னத்தில் முதன்முதலாக போட்டியிட்டு வென்றவருமான மாயத் தேவர் உடல் நலக்குறைவு காரணமாக காலமான நிலையில் அவரது உடலுக்கு மரியாதை செலுத்த சசிகலா வருகை.

அவரது உடல் பொதுமக்கள் மற்றும் கட்சியினர் அஞ்சலிக்காக சின்னாளபட்டியில் உள்ள மாயத் தேவரின் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவரது உடலுக்கு மரியாதை செலுத்துவதற்காக சசிகலா சென்னையில் இருந்து மதுரை வந்து அங்கிருந்து கார் மூலம் சின்னாளப்பட்டி வந்து மாயத்தேவரின் உடலுக்கு மரியாதை செலுத்தினார்.

இதற்கு முன்னர் மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்த வீ.கே.சசிகலா செய்தியாளர்களை சந்தித்து பேசிதாவது, புரட்சித்தலைவர் அதிமுகவை தொடங்கிய சிறு காலத்திலயே திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் மாயத்தேவர் அதிமுக சார்பில் நிறுத்தப்பட்டு இரட்டை இலை சுயேட்சை சின்னத்தில் நின்று வெற்றி பெற்றவர் கழகத்தின் முதல் வெற்றிக்கு சொந்தகாரர் அவருடைய இழப்பு ஈடு செய்ய இயலாதது, அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த செல்கிறேன். தற்போதைய அதிமுகவின் பிளவு குறித்த கேள்விக்கு பதலளித்த சசிகலா பிளவுகளை கடந்து நிச்சயமாக அதிமுக ஒன்றிணையும், அதிமுக வெற்றி வாகை சூடும், அம்மாவின் ஆட்சியை உருவாக்குவோம் என்று கூறினார்.