சாதாரண பயனர்களுக்கு ட்விட்டர் தளம் இலவசமாகத்தான் இருக்கும் ஆனால் வர்த்தக ரீதியாக பயன்படுத்துவோர், அரசாங்கம் சார்ந்தோருக்கு சிறிய அளவில் கட்டணம் வசூலிக்கப்படலாம் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
உலகின் நம்பர் 1 பணக்காரர் எலன்மஸ்க். ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா, ஸ்டார் லிங்க் பல நிறுவனங்களுக்கு சொந்தக்கார்ர்.சமீபகாலமாக ட்விட்டர் உரிமையாளர் என்றே பெரிதும் அறியப்படுகிறார். காரணம், ட்விட்டர் நிறுவனத்தை அவர் வாங்கியுள்ளதே. 44 பில்லியன் டாலருக்கு மஸ்க்கிடம் விற்க ட்விட்டர் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. ட்விட்டர் நிறுவனம் கைமாறும் நிலையில் பல அறிவிப்புகளை நாள்தோறும் எலான் மஸ்க் அறிவித்துவருகிறார்.
இது தொடர்பாக பதிவிட்ட ட்வீட்டில், “ட்விட்டர் சாதாரண பயனர்களுக்கு எப்போதும் இலவசமாகத் தான் இருக்கும். ஆனால் வர்த்தக ரீதியாக அல்லது அரசு சார்ந்து ட்விட்டரைப் பயன்படுத்துவோருக்கு சிறிய கட்டணம் வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.
புதிய அம்சங்களை ட்விட்டரில் அறிமுகப்படுத்த வேண்டும் என்று அவர் கூறி வருகிறார். குறிப்பாக எடிட் பட்டன், அனைவருக்கும் வெரிஃபிகேஷன், ஓப்பன் அல்காரிதம் என்று பல விஷயங்களைப் பேசி வருகிறார். இந்நிலையில் ட்விட்டர் சாதரணபயன்பாட்டுக்கு இலவசமாக கிடைத்தாலும் வர்த்தக பயன்பாட்டு க்குகட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இனி என்ன என்ன மாற்றங்களை அவர் அறிமுகப்படுத்தவார் என உலகமுழுவதும் ட்டுவிட்டர் பயனாளர்கள் காத்திருக்கிறார்கள்.
ட்விட்டரை வர்த்தக ரீதியாக பயன்படுத்தினால் இனி கட்டணம் -எலான் மஸ்க் அதிரடி அறிவிப்பு
