கோடைகாலத்தின் உச்சக்கட்டமாக கத்திரி வெயில்துவங்கியுள்ளது. எனவேகோடை காலம் முடியும் வரை மக்கள் தண்ணீர் பாட்டிகளுடன் வெளியே செல்லுங்கள்-அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை மாநகராட்சி சார்பில் கோடைகால வெப்பம், வெப்ப அலை பாதிப்பு தடுப்பு விழிப்புணர்வு கண்காட்சியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘வேலூர், மதுரை, கரூர், சென்னை, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் நிலவுகிறது. எனவே கோடை காலம் முடியும் வரை மக்கள் தண்ணீர் பாட்டிகளுடன் வெளியே செல்லுங்கள். தாகம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கோடைகாலத்தில் போதிய அளவு நீர் குடிக்க வேண்டும்.
மேலும் கோடை காலத்தில் மது அருந்துவதை குறைத்துக் கொள்ளுமாறு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ஆம்லேட் போடும் அளவுக்கு வெயில் உள்ளதால் வாகனங்களின் சீட்டில் துண்டை போட்டு வையுங்கள். பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் குளிர்பானங்களை தவிர்க்க வேண்டும். எலுமிச்சை உள்ளிட்ட பல சாறுகளை பகிருங்கள்; அவசியம் இல்லாமல் பகல் 11 முதல் பிற்பகல் 3 மணி வரை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்.
முழு உடலையும் மூடும் வகையில் ஆடைகளை அணிவதன் மூலம் வெப்பத்தில் இருந்து காத்துக் கொள்ளுங்கள். காலனி இல்லாமல் செல்வதை மக்கள் தவிர்க்க வேண்டும். வீடுகளின் முன் நிறுத்தி வைக்கப்படும் வாகனங்களின் மீது குழந்தைகளை அமர வைக்க வேண்டாம். வெயில் பாதித்தோருக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகள், படுக்கைகள் தயார். தமிழகத்தில் இதுவரை எக்ஸ்இ கொரோனா பாதிப்பு கண்டறியப்படவில்லை. இதுவரை 27 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. சென்னையில் 1,600 இடங்களில் நடைபெற்றது. சென்னையில் வருகிற 8ம் தேதி 3,000 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது,’என்றார்.
கோடை காலம் முடியும் வரை மக்கள் தண்ணீர் பாட்டில்களுடன் வெளியே செல்லுங்கள்-அமைச்சர் மா. சுப்பிரமணியன்
