சினிமாவில் புதுமைக்கு என்று பெயர் பெற்றவர், நடிகர் பார்த்திபன். அவர் இயக்கிய ஒத்த செருப்பு திரைப்படம் ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் இயக்கி இருக்கும் இரவின் நிழல் திரைப்படம் பல புதுமைகளை அடக்கி இருக்கிறது. படம் முழுவதும் சிங்கிள் ஷாட்டாக எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்திய அளவில் சிங்கிள் ஷாட்டாக எடுக்கப்பட்டிருக்கும் முதல் படமாக இரவின் நிழல் புதிய அத்தியாயத்தை உருவாக்கியுள்ளது
நேற்று இரவின் நிழல் படத்தின் முதல் பாடல் வெளியீட்டு விழாவில் பார்த்திபன் மற்றும் ஏ ஆர் ரகுமான் ஒன்றாக மேடையில் அமர்ந்து படத்தை பற்றி உரையாடினர். அப்போது பார்த்திபன் ” நான் இருபது வருடங்கள் உங்களுடன் பணியாற்ற முயற்சி செய்து வருகிறேன். ஒவ்வொரு படம் எடுக்கும் போதும் உங்களை அணுகும் முயற்சி செய்வேன். ஆனால் ஏதோ காரணத்தினால் அது நிராகரிக்கப்பட்டு விடும் ” என சொல்லி ” ஆனால் கடைசியாக இரவின் நிழல் படத்தின் கதையை சொன்னதும் நீங்கள் ஓகே சொல்லிவிட்டீர்கள்.
எதற்காக இந்த படத்திற்கு ஓகே சொன்னீர்கள் என பார்த்திபன் கேட்க ஏ ஆர் ரகுமான் அதற்கு பதிலாக ” கதை கேட்டதும் உங்க மேல மரியாதை வந்தது, எல்லாருக்கும் சின்ன வயசுல ஒரு வேட்கை இருக்கும். வயசு ஆக ஆக அது குறைந்து போய்விடும். ஆனால் அது உங்க கிட்ட இன்னும் கொழுந்து விட்டு எரியுது. இந்த ஐடியா முதல்ல கேட்டபோது பைத்தியக்காரத்தனமா இருந்தது. இதை எப்படியாவது எடுப்பீங்க என தெரியும் ஆனா இவ்வளவு நல்லா எடுப்பீங்கன்னு நான் எதிர்பார்க்கல ” என சொன்னதும் அதற்கு பதிலாக பார்த்திபன் ” அது எனக்கே தெரியல ” என்றார்!