• Tue. Oct 13th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

விடுமுறை தேதியில் வெந்து தணிந்தது காடு ரிலீஸ்!

சிம்பு நடிப்பில் உருவாகும் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
நடிகர் சிம்பு நடித்த மாநாடு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை அவருக்குப் பெற்றுக் கொடுத்துள்ளது.. இந்நிலையில் அடுத்து அவர் நடிக்கும் திரைப்படமான வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் மேலும் பயங்கரமான எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படத்தில் சிம்பு – கௌதம் – ஏ ஆர் ரஹ்மான் ஆகிய வெற்றிக் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர்.

சென்னை மும்பை என இரண்டு இடங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்த நிலையில் இப்போது மொத்த படப்பிடிப்பும் முடிந்துள்ளது. இந்நிலையில் படத்தில் இடம்பெற்றுள்ள முதல் பாடல் வரும் மே 6 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் ரிலீஸ் பற்றிய தகவல் ஒன்றும் தற்போது வெளியாகியுள்ளது. சுதந்திர தின விடுமுறையை முன்னிட்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி இந்த படம் ரிலீஸாகும் என சொல்லப்படுகிறது.