• Wed. Aug 26th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

பாதுகாப்பு கேட்டு மனு அளித்த உசிலம்பட்டி எம்எல்ஏ விஜய்-க்கு போலீசார் பாதுகாப்பு..,

ByP.Thangapandi

Aug 26, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினரான ம.விஜய், மக்களை சந்திக்க பொது இடங்களுக்கு செல்லும் போது, தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், பாதுகாப்பு வழங்க வேண்டும் என கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேவநாதனிடம் கோரிக்கை மனு அளித்திருந்தார்.,

இந்நிலையில் இன்று முதல் முதல்வர் விஜய் உத்தரவின் பேரில் இரு துப்பாக்கி ஏந்திய போலீசார் உசிலம்பட்டி எம்எல்ஏ விஜய்-க்கு பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.,

இருவரும் சுழற்சி முறையில் எம்எல்ஏ விஜய்-யுடன் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருப்பார்கள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.,

கடந்த இரு தினங்களுக்கு முன் சட்டசபையில் முதன் முறையாக பேசிய போதே திமுக தரப்பிலிருந்து பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பிய சூழலில், எம்எல்ஏ விஜய்க்கு போலீசார் பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.,