• Sat. Jun 14th, 2025
[smartslider3 slider="7"]

பிரைம் வீடியோவில் வெளியாகிறது ‘சாணி காயிதம்’!

ஸ்கிரீன் சீன் மீடியா நிறுவன தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ், செல்வராகவன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கும் சாணிக்காயிதம் திரைப்படம் வரும் மே 6ம் தேதி பிரைம் வீடியோ ஓ.டி.டி. தளத்தில் ஒளிபரப்பாகிறது.

தான் நடிக்க வந்தது குறித்து செல்வராகவன் கூறுகையில், ‘நான் இயக்குனராக இருக்கும் காலத்தில் இருந்தே நேரத்தைப் பார்த்து வேலை செய்வது கூடாது என்ற ஒரு கொள்கை எனக்கு இருந்தது. செய்யும் பணியில் முழு கவனத்தோடு செயல்படும்போது நேரம் போவதே தெரியாது. அனைத்தும் என் விருப்பப்படி நடந்த பிறகுதான் பேக்கப் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதை உணர்வேன். இது அனைத்துப் பணிகளுக்கும் பொருந்தும். நடிப்பது சலிப்பு ஏற்படுத்துவதாகவே இருக்கும் என்று நான் முதலில் நினைத்தேன். ஆனால் அது ஒவ்வொரு நாளும் பல விஷயங்களை கற்பிப்பதாக இருந்தது. பொறுமை காத்து என்னுடன் இணைந்து நடித்த கீர்த்தி சுரேஷ் மற்றும் அருண் ஆகியோருக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.’ என்றார்.

கான்ஸ்டபிளாகப் பணிபுரியும் பொன்னி (கீர்த்தி சுரேஷ்) தனது ஐந்து வயது மகள் தனா மற்றும் அரிசி ஆலையில் கூலியாளாகப் பணிபுரியும் அவரது கணவர் மாரி ஆகியோருடன் வாழ்கிறார். ஒரு துரதிர்ஷ்டவசமான இரவில், அவள் அனைத்தையும் இழக்க நேரிடுகிறது. தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்குப் பழிவாங்க, சங்கையாவின் (செல்வராகவன்) ஆதரவைப் பெறுகிறாள். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் கதை. இப்படம், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் சின்னி என்ற பெயரில் வெளியாகிறது.