திண்டுக்கல்லில் முதியவரிடம் நூதன முறையில் ரூ.4,94,000 பணம் மோசடி நடந்தது.
திண்டுக்கல் கூட்டுறவு நகரை சேர்ந்த கிருஷ்ணன்(70) இவரின் செல்போனுக்கு குறுஞ்செய்தியாக வந்த RTO, E-செலான் தொடர்பான வந்த இணைப்பை தொட்டவுடன் கிருஷ்ணன் வங்கி கணக்கில் இருந்து ரூ.4,94,000 பணம் மாயமானது.

அதிர்ச்சி அடைந்த கிருஷ்ணன் இது தொடர்பாக திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் உலகநாதன், சார்பு ஆய்வாளர் விஜய் மற்றும் காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




