• Fri. Mar 29th, 2024

கொசுவை ஒழிக்க புதிய கொசு கண்டுபிடிப்பு

ByA.Tamilselvan

Jul 7, 2022
 டெங்கு உள்ளிட்ட பல நோய்கள் பரவ காரணமாக இருப்பவை கொசுக்கள் . கொசுக்களை  ஒலிக்க புதியவகை கொசுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
              முள்ளை முள்ளால் எடுப்பது தான் சரி என்பார்கள்... அதேபோல கொசுக்களை ஒழிக்கபுதியவகை கொசுக்கள் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

டெங்கு மற்றும் சிக்குன்குனியாவைக் கட்டுப்டுத்த ஐசிஎம்ஆர்- வெக்டார் கட்டுப்பாட்டு ஆராய்ச்சி மையம் சார்பில் சிறப்பு பெண் கொசுக்களை உருவாக்கியுள்ளது. புதுச்சேரியில் உள்ள ஐசிஎம்ஆர் வெக்டார் கட்டுப்பாட்டு ஆராய்ச்சி மையம் கடந்த நான்கு ஆண்டுகளாக வொல்பாச்சியா என்கிற கொசுக்கள் உற்பத்தி மீது ஆய்வு செய்து அதற்கான பணிகளை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து ஐசிஎம்ஆர்- விசிஆர்சி மருத்துவர் அஷ்வனி குமார் கூறுகையில், ” டெங்கு மற்றும் சிக்குன்குனியா சொசுக்களுக்கு எதிராக பெண் கொசுக்களை உருவாக்கி உள்ளோம். ஆண் கொசுக்களுடன் இனச்சேர்க்கை செய்யும் பெண் கொசுக்களை விடுவிப்போம். இது வைரஸ்கள் இல்லாத லார்வாக்களை உருவாக்கும். நாங்கள் கொசுக்கள் மற்றும் முட்டைகளை உருவாக்கியுள்ளோம். அது எப்போது வேண்டுமானாலும் வெளிவரலாம். இதற்கான ஆய்வு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *