இலங்கையில் பொருளாதார நெருக்கடி தீர்ந்தபாடில்லை,அதிபர் பதவிவிலகக் கோரி போராட்டம் தொடர்ந்து வருகிறது.இதேபோல இந்தியாவின் அடுத்த பக்கத்து நாடான பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடியில் சிக்கி இம்ரான்கான் பதவி பறிபோனது.இப்படி இந்தியாவின் அண்டைநாடுகள் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி வரும்நிலையில் அடுத்து இந்தியா தான் என் எதிர்கட்சியினர் ஆருடம் கூறிவந்தனர்.
ஆனால் அடுத்த இந்தியாவின் மற்றொரு அண்டை நாடான நேபாளம் நெருக்கடியில் உள்ளதாகதகவல்கள் வருகின்றன.
இலங்கை பாகிஸ்தானை அடுத்து நேபாளமும் பிரச்சனை எதிர்கொண்டு வருகின்றது. குறிப்பாக இலங்கை பாகிஸ்தானை போலவே நேபாளத்தின் அன்னிய செலவாணி கையிருப்பும் கரைந்து வருகின்றது. கடந்த மார்ச் மாத நிலவரப்படி, நேபாளின் அன்னிய செலவாணி கையிருப்பு வெறும் 975 மில்லியன் டாலராக குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டு ஜூலையில் 1175 மில்லியன் டாலராக இருந்தது. ஆக இதற்கிடையிலான 7 மாத காலகட்டத்தில் மட்டும் 200 மில்லியன் டாலர் அன்னிய செலவாணி குறைந்துள்ளது கவனிக்கதக்கது. அன்னிய செலவாணி என்பது ஒவ்வொரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு அம்சமாகும். இந்த விகிதம் ஏற்றுமதியை விட அதிகமாக இறக்குமதி செய்யும்போது அன்னிய செலாவணி கையிருப்பு குறையத் தொடங்குகிறது. அந்த வகையில் மேற்கோண்டு அன்னிய செலவாணி குறையாமல் இருக்க, நேபாளம் அதற்கான நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியுள்ளது.
நேபாள அரசு சொகுசு கார்கள், ஆல்கஹால், புகையிலை மற்றும் பல சொகுசு பொருட்கள் இறக்குமதிக்கு தடை விதித்துள்ளது. இது அன்னிய செலவாணி குறையாமல் இருக்க வழி வழிவகுக்கும். நேபாள அரசின் இந்த அறிவிப்பில் அவசரகால வாகனங்கள் தவிர மற்ற வாகனங்களை இறக்குமதி செய்ய முடியாது. மேலும் 600 டாலர்களுக்கு மேல் விலையுள்ள மொபைல் போன்கள், ஆல்கஹால், புகையிலை பொருட்கள், பெரிய எஞ்சின் மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்ய முடியாது. இந்த தடை நடவடிக்கையானது ஜூலை நடுப்பகுதி வரையில் நடைமுறைக்கு வரும் இந்த தடையானது, இந்த ஆண்டில் இறுதியில் முடிவடையலாம்.
கொரோனா வைரஸ் தொற்று நோய்களின் போது சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் வீழ்ச்சி கண்டது. எனினும் தற்போது கொரோனாவின் தாக்கம் குறையத் தொடங்கியுள்ள நிலையில், சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. மேலும் நாட்டில் இருந்த பணியாளர்கள் வெளி நாட்டிற்கு மீண்டும் திரும்பத் தொடங்கியுள்ளனர்.
இந்த நடவடிக்கையால் இலங்கை பாகிஸ்தான் போல நேபாளம் மாறாமல் இருக்குமா என பார்க்கலாம்.
இலங்கை, பாகிஸ்தானை அடுத்து நேபாளம்…
