இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக இருந்து ராஜா ராணி படம் வாயிலாக இயக்குநராக அறிமுகம் ஆனவர் அட்லி. தற்போது, பாலிவுட்டில் நடிகர் ஷாருக்கானை வைத்து படம் இயக்கி வருகிறார்!
இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நேற்று மும்பை விமான நிலையத்தில் இருந்து தனது காரில் ஏறி செல்லும் வீடியோ இணையதளங்களில் வைரலாகிறது. இதனை அடுத்து அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வரும் லயன் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்காக நயன்தாரா மும்பை சென்றுள்ளார் என்று கூறப்படுகிறது. எங்கு சென்றாலும் விக்னேஷ் சிவனுடன் செல்லும் நயன்தாரா, தனியாக மும்பைக்கு சென்றதால், ரசிகர்கள் பலர் விக்னேஷ் சிவன் எங்கே என்று கேட்டு வருகின்றனர்.