இயக்குனர் எஸ் எஸ் ராஜமௌலி இயக்கத்தில் உருவான பிரம்மாண்டமான திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். இப்படம் கடந்த மார்ச் 25 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகி உலகம் முழுவதும் வசூலில் சக்கைபோடு போட்டு வருகிறது.
இந்நிலையில், நடிகர் ராம்சரண் ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில், இந்தப் படத்தில் பணியாற்றிய சுமார் 35 பேரை தனது ஹைதராபாத் வீட்டுக்கு அழைத்து அவர்களுடன் காலை உணவருந்தி, அனைவருக்கும் 10 கிராம் மதிப்புள்ள தங்க நாணயத்தை பரிசாக அளித்துள்ளார். அந்த தங்க நாணயத்தின் ஒரு பக்கம் ஆர்ஆர்ஆர் என்ற லோகோவும் மறுபக்கம் ராம் சரண் பெயரும் பொறிக்கப்பட்டுள்ளது. இதற்காக அவர் ரூ.18 லட்சம் செலவழித்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் ஒவ்வொரு டெக்னிஷனுடனும் புகைப்படமும் எடுத்துக்கொண்டுள்ளார்.