நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் தங்களது புதிய காருக்கு பாடிகாட் முனீஸ்வரன் கோயிலில் பூஜை போட்டுள்ளனர்.
காதலர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்து வரும் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் அடுத்த மாதம் 28ம் தேதி திரைக்கு வருகிறது.
இயக்குநர் விக்னேஷ் சிவன் ரொம்பவும் பக்திமான். ஆண்டுதோறும் தவறாமல் சபரி மலைக்கு மாலை போட்டு சென்று வருகிறார். விக்னேஷ் சிவனை காதலித்து வரும் நிலையில், நடிகை நயன்தாராவும் பக்தி மார்க்கத்தில் ஐக்கியமாகி விட்டார். விக்னேஷ் சிவன் உடன் இணைந்து அனைத்து இந்து கோயில்களுக்கும் சென்று வழிபாடு நடத்தி வருகிறார்.
ஏகப்பட்ட சொகுசு கார்களை வைத்திருக்கும் நடிகை நயன்தாரா, தற்போது புதிதாக ஒரு இனோவா காரை வாங்கி உள்ளார். அதற்கான பூஜையை போட்ட நிலையில், தான் அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகின்றன.
ஏற்கனவே டீ பிசினஸ், ரியல் எஸ்டேட்டில் முதலீடு என மற்ற தொழில்களிலும் ஆர்வம் செலுத்தி வரும் நயன்தாரா புதிதாக டாக்ஸி பிசினஸையும் ஆரம்பிக்க போகிறாரா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.சென்னை, சென்ட்ரல் அருகே உள்ள பாடிகாட் முனீஸ்வரன் கோயிலுக்கு தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் வந்த நடிகை நயன்தாரா தங்களது புதிய காருக்கு பூஜை போட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தான் தற்போது சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றன..