அஜித் தனது மனைவி, மகள் மற்றும் மகனுடன் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
அஜித் நடித்த வலிமை திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் வசூலை வாரி குவித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அஜித்தின் அடுத்த படமான அஜித் 61 என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்க உள்ளது.
இந்த நிலையில் அஜீத் தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அஜித்தின் மனைவி ஷாலினி மற்றும் மகள் அனோஷ்கா, மகன் ஆத்விக் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் அந்த புகைப்படத்தை அஜித் ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.