• Wed. Mar 26th, 2025

கட்டுமான பொருட்கள் விலை உயர்வுக்கு எதிர்ப்பு

ByR. Vijay

Feb 26, 2025

நாகையில் ஒப்பந்தக்காரர்கள், பொறியாளர்கள் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். கட்டுமான பொருட்களையும், உபகரணங்களையும் காட்சிப்படுத்தி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

கட்டுமான தொழிலுக்கு பயன்படும் பி சாண்ட், எம் சாண்ட், ஜல்லி, அரளை உள்ளிட்ட பொருட்களின் கடுமையான விலையேற்றத்தை கண்டித்து கட்டுமான பொறியாளர்கள், ஒப்பந்தக்காரர்கள் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது.

அதன்படி நாகை மாவட்டத்தில் உள்ள ஒப்பந்தக்காரர்கள் பொறியாளர்கள் கட்டிட தொழிலாளர்கள் நேற்றைய தினத்தில் இருந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கிரஷர் கம்பெனிகளை கண்டித்தும் , தமிழக அரசு விலையேற்றத்தை கட்டுப்படுத்த வலியுறுத்தியும் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று கட்டுமான தொழிலாளர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பி சாண்ட், எம் சாண்ட், ஜல்லி, மண்வெட்டி, கடப்பாரை, சவுல் உள்ளிட்ட கட்டுமான உபகரணங்களை காட்சிப்படுத்தி தங்களது கோரிக்கை முழக்கங்களை எழுப்பி அரசுக்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். கனிம வளத்துறை மற்றும் கட்டுமானதுறையை அழைத்து முத்தரப்பு பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்றும் கூறியுள்ள கட்டுமான தொழிலாளர்கள், போராட்டம் காரணமாக ஒப்பந்தக்காரர்கள், பொறியாளர்கள், தொழிலாளர்கள் பாதித்துள்ளதாக கூறினார்.

மேலும், அரசு மற்றும் தனியார் கட்டுமான பணிகள், கிராம புற சாலை பணிகள் நடைபெறாமல் தடைபட்டு இருப்பதாகவும், கட்டுமான ஒழுங்குமுறை ஆணையத்தை அமைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.