

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் 50 ஆண்டுகளில் முதன்முறையாக பிரம்மாண்ட சுழல்காற்று ஒன்று துவம்சம் செய்யும் காட்சி ஒன்று பதிவாகியுள்ளது.
கனடாவின் சுற்றுச்சூழல் அமைப்பு, சனிக்கிழமையன்று பிரிட்டிஷ் கொலம்பிய பல்கலைக்கழகம் வழியாக சுழல் காற்று கடந்து சென்றதை உறுதி செய்துள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் வான்கூவர் நகரில் இப்படி ஒரு சுழல் காற்று கண்ணில் தென்படுவது இதுவே முதன்முறையாகும்.
24 நிமிடங்கள் நீடித்த அந்த சுழல் காற்று, வான்கூவர் சர்வதேச விமான நிலையத்துக்கு அருகில் தென்பட்டுள்ளது.இதற்குமுன், 1967-ம் ஆண்டு, அதாவது 54 ஆண்டுகளுக்கு முன்புதான் வான்கூவரில் சுழல்காற்று ஒன்று உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 70 ஆண்டுகளில் இதுவரை வான்கூவர் பகுதியில் 7 சுழல்காற்றுகள் பதிவாகியுள்ளது என்று கூறியுள்ள வானிலை ஆராய்ச்சியாளர்கள், அதுவும் இப்படி நவம்பர் மாதத்தில் இப்படி ஒரு காட்சியைக் காண்பது மிகவும் அபூர்வம் என்கிறார்கள்.
