தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய சினிமாக்களில் பணியாற்றிய பிரபல நடன இயக்குநர் கூல் ஜெயந்த் புற்று நோய் காரணமாக காலமானார்.
இவர் பிரபுதேவா, ராஜூசுந்தரத்தின் குழுவில் இருந்து வந்து நடன இயக்குநரானவர். 1996ஆம் ஆண்டு வெளியான காதல் தேசம் படம் மூலம் கூல் ஜெயந்த் நடன இயக்குநராக அறிமுகம் ஆனார்.முஸ்தபா முஸ்தபா, கல்லூரி சாலை பாடல்களுக்கு நடன இயக்குநர் இவர் தான்.
அந்தப்பாடல்கள் இன்றளவும் பேசப்படுகின்றன. மலையாளத்தில் பேம்பூ பாய்ஸ், மயிலாட்டம், கல்யாண குரிமணம், மாயாவி என பல்வேறு திரைப்படங்களில் பணியாற்றி உள்ளார்.
தென்னிந்தியாவில் 400க்கும் மேற்பட்ட படங்களில் இடம் நடன இயக்குநராக பணியாற்றியுள்ளார். புற்றுநோய் பாதித்து சிகிச்சை பெற்று வந்த இவர் இன்று காலை காலமானார். கூல் ஜெயந்தின் மறைவுக்கு திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.