முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் திமுகவை கண்டித்து மதுரையில் போராட்டம் நடத்திய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ உள்ளிட்ட 998பேர் மீது வழக்குப்பதிவு.
முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசின் அத்துமீறலை கண்டித்தும் திமுக அரசு அலட்சியமாக செயல்படுவதாக கண்டனம் தெரிவித்தும் இந்த அணையால் பயன்பெறும் 5 மாவட்டங்களில் அதிமுக சார்பில் போராட்டம் நடைபெற்றது.
இதில் முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் மதுரை முனிச்சாலை பகுதியில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.இந்த நிலையில் 144 தடையை மீறி போராட்டம் நடத்தியதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, மற்றும் 998 பேர் மீது தெப்பக்குளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.