• Thu. Apr 25th, 2024

நாகேஸ்வரன் கோயில் சிவலிங்கத்தை தரிசனம் செய்த சூரிய ஒளி..!

Byவிஷா

Apr 25, 2023

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் நாகேஸ்வரன் கோயிலில் சிவலிங்கத்தின் மீது ஆண்டுதோறும் சித்திரை மாதம் 11, 12, 13 ஆகிய மூன்று நாட்களும் சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது பட்டு நாகேஸ்வரரை வழிபடுவதாக வரலாறு. மேலும் இங்கு சூரியனுக்கென்று தனி சன்னதியும் உள்ளது. இத்தகைய சிறப்பு பெற்ற தலத்தில் ஒவ்வொரு ஆண்டும் சூரிய பூஜை நடைபெறுவது வழக்கம். அதுபோல இவ்வாண்டு சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுந்த போது சூரிய பூஜை நடைபெற்றது. அப்போது நாகேஸ்வரர், பெரியநாயகி அம்மன் மற்றும் கோயிலில் உள்ள சூரிய பகவான் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *