நேற்றிரவு தலைநகர் டெல்லியில் மர்ம நபர்கள் துப்பாக்கிசூடு நடத்தினர்.இதனால் டெல்லி முழவதும் பரபரப்பு ஏற்பட்டது.
தலைநகர் டெல்லியின் மேற்கு பகுதியில் உள்ள சுபாஷ் நகர் சாலை பகுதியில் நேற்றிரவு வழக்கம் போல் வாகனங்கள் சென்று கொண்டிருந்த போது திடீரென மர்ம நபர்கள் சிலர் ஒரு வாகனத்தை குறி வைத்து 10 ரவுண்டுகளுக்கு மேல் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
பின்னர் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர்கள் தப்பிச் சென்றனர். துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்த அஜய் சவுத்ரி, ஜசா சவுத்ரி ஆகியோர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அந்த பகுதி முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டனர். வாகன போக்குவரத்து மிகுந்த சாலையில் நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் டெல்லி சுபாஷ் நகர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.