டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொலை மிரட்டல் விடுத்த பாஜக தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
டெல்லியைச் சேர்ந்த, பாஜக கட்சியின் பாரதிய ஜனதா யுவா மோர்ச்சாவின் தேசிய செயலாளர் தனிந்தர்பால் சிங்க பக்சா.
இன்று இவரது வீட்டிற்குள் நுழைத போலீஸார் , மத விரோதத்தை ஊக்குவித்தல், மிரட்டல், ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் தஜிந்தரை கைது செய்தனர். கடந்த மார்ச் மாதம் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய தஜிந்தர், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசினார். இதுகுறித்து, ஆம் ஆத்மியை சேர்ந்த சன்னி சிங் போலீஸில் புகார் அளித்தார். எனவே, இவ்வழக்குத் தொடர்பாக தஜிந்தரை கைது செய்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.