எனது சிறந்த ஆசிரியர், வழிகாட்டி டாக்டர் கலைஞர் என பாஜகவை சேர்ந்த குஷ்பு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் குஷ்பூ ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.
தற்போது குஷ்பு பாஜகவில் சில முக்கிய பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், இன்று ஆசிரியர்கள் தினத்தையொட்டி தனது ட்விட்டர் பதிவில் குஷ்பு ” எனக்கு வழிகாட்டி, சிறந்த ஆசிரியர் டாக்டர் கலைஞர் என தெரிவித்துள்ளர். அரசியல் என்பது வெறுப்பும், காழ்ப்புணர்ச்சியும் அல்ல, நம்பிக்கையும், சேவையும் என கற்றுக்கொடுத்ததற்கு நன்றி சொல்ல வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.
Most importantly I must thank my mentor, my great teacher #DrKalaignar Avl for teaching me politics is not about hate or despair, but hope and service. 🙏🙏🙏🙏
— KhushbuSundar (@khushsundar) September 5, 2021