• Mon. Mar 20th, 2023

கப்பலோட்டிய தமிழனுக்கு, பாஜகவினர் மாலை அணிவித்து மரியாதை !

By

Sep 5, 2021 ,

தென்காசி மாவட்ட பாஜக தலைவர் ராமராஜ் தலைமையில் வ.உ.சிதம்பரனார் 150-வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
புளியங்குடி நரசிங்க பெருமாள் கோவிலில் நடைபெற்ற இந்த விழாவில், வ.உ.சி திருவுருவப்படத்திற்கு ராமராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதில் மாவட்ட பொதுச்செயலாளர் முத்துலட்சுமி, மாவட்ட துணைச் செயலாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் அருள்செல்வன், மாநில செயற்குழு உறுப்பினர் பாண்டித்துரை உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

சிவகிரி தங்கம் தலைமையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிவகிரி ,ரஜினி, கருப்பையா , மாரியப்பன், ராமசுப்பு மற்றும் என்.கே மாரியப்பன் ஆகியோர் முன்னிலையில் 50க்கும் மேற்பட்டோர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தனர்..

செய்தியாளர் ஜெபராஜ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *