மத்திய அரசு அனைத்து துறைகளையும் தனியார் மயமாக்கி வருவதை கண்டித்து காங்கிரஸ் கட்சி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் எம்பி ஜெயக்குமார் பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் விஜய்வசந்த் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.