


வக்ஃபு வாரிய சட்டத்திருத்தத்திற்கு எதிராக தமிழ்நாடு, புதுச்சேரி ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் காரைக்காலில் கண்டன பேரணியில் 2000க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.
வக்ஃபு வாரிய சட்டத்திருத்தத்திற்கு எதிராக தமிழ்நாடு, புதுச்சேரி ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் காரைக்கால் புதிய பேருந்து நிலையத்திலிருந்து இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்ட கண்டன பேரணி நடைபெற்றது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வம்பு வாரிய சட்ட திருத்தத்திற்கு எதிராக கண்டனம் முழக்கங்களை எழுப்பிய படி காரைக்காலில் முக்கிய வீதிகள் வழியாக இப்பேரணி சென்று காரைக்கால் பெரிய பள்ளிவாசலில் நிறைவுற்றது. காரைக்கால் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவர் முகமது சல்மான் தலைமையில் நடைபெற்ற இப்பேரணியில் காங்கிரஸ், திமுக, விடுதலை சிறுத்தைகள், மதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த பிரமுகர் உள்ளிட்ட 2000-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.


