



காரைக்காலில் இளம்பெண் வினோதினி(26) மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தை மாவட்ட எஸ்.பி.லட்சுமி சௌஜன்யா நேரடியாக வந்து ஆய்வு செய்து விசாரணை செய்தார்.
காரைக்கால் நகர பகுதியில் உள்ள ராஜாத்தி நகரில் உள்ள வீட்டில் ஏற்கனவே திருமணம் ஆன இளம்பெண் வினோதினியை தயாளன் கடந்த சில மாதங்களாக வீட்டில் வைத்திருந்ததும், நேற்று இரவு முதல் இருவருக்கும் சண்டை நடந்ததாக கூறிய நிலையில் காலையில் இறந்துள்ளார். முதல்கட்ட விசாரணையில் கொலையா? என்று கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகின்றது. மதியம் போலீசாருக்கு தகவல் வந்தவுடன் போலீசார் கண் முன்னே தப்பி சென்ற தயாளணை, இரண்டு மணி நேரம் பதுங்கி இருந்தவரை போலீசார் மடக்கி பிடித்தனர்.


சம்பவம் நடந்த இடத்திற்கு மாவட்ட எஸ்.பி.லட்சுமி சௌஜன்யா நேரடியாக வந்து ஆய்வு செய்து விசாரணை செய்தர்.
உயிரிழந்த வினோதினி திருநள்ளார் பகுதியை சேர்ந்தவர் என்பதும், இவருக்கு சக்திவேல் என்பவருடன் திருமணம் ஆகி இரு குழந்தைகள் உள்ளது. தயாளன் பழக்கம் ஏற்பட்டு இருந்த நிலையில், தற்போது மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


