• Fri. Apr 26th, 2024

முல்லைப்பெரியாறு அணைக்கு தொழில்படை பாதுகாப்பு அளிக்க கோரி உண்ணாவிரத போராட்டம்

Byமதி

Oct 31, 2021

முல்லைப்பெரியாறு அணையில் மத்திய தொழில்படை பாதுகாப்பு அளிக்க கோரி நவ-12ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்த இருப்பதாக தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறினார்.

முல்லைப்பெரியாறு அணை நீர் திறப்பு விவகாரம் தொடர்பாக மதுரையில் மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5மாவட்ட விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த தமிழக காவிரி விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் பேசியபோது,

முல்லைப்பெரியாறு அணை திறப்பு குறித்து தமிழகத்தின் உரிமையை மீட்க கோரி நவ12ஆம் தேதி விவசாய சங்கம் சார்பில் தேனி மாவட்டம் கூடலூரில் விவசாயிகள் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் எனவும், முல்லைப்பெரியாறு அணையை உடைக்க முயலும் கேரள அரசை கண்டித்தும், சட்ட விரோதமாக முல்லைப்பெரியாறு அணைக்குள் நுழைந்து தமிழக அரசின் உத்தரவின்றி தண்ணீரை திறந்த்தற்காக கேரள அமைச்சர்கள் மீது மீது நடவடிக்கை எடுக்க கோரியும், அணைப்பகுதிக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படை பாதுகாப்பு அளிக்க கோரியும் முதற்கட்ட போராட்டமாக உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் எனவும், இதனை தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டம் நடத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

தண்ணீர் திறப்பு குறித்து உரிய முறையில் அறிவிக்கப்பட்டதாக தமிழக நீர்பாசனத்துறை அமைச்சரின் கருத்தை மறுக்கவில்லை. அது உண்மை எனில் ஏன் தேனி மாவட்ட ஆட்சியரிடம் கூறவில்லை , அணை திறப்பு குறித்தும் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தால் இந்த விபரீத விளைவு ஏற்பட்டிருக்காது, உரிய அனுமதி பெறப்பட்டதா என்பது குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும். தமிழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அணையில் கேரள அமைச்சர்கள் நுழைந்தது எப்படி, நீர்பாசனத்துறை அமைச்சர் தண்ணீரை திறந்துவிட்டது மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்படுத்தியதோடு சந்தேகமும் அளிக்கிறது, இந்த விவகாரத்தில் அரசியலமைப்பு சட்டத்தை கேரள அரசு மீறுகிறது, கேரள அரசு அனுமதித்தால் தான் தமிழக பொறியாளர்களே நுழையும் நிலை உள்ள நிலையில் கேரள அமைச்சர்கள் நுழைந்தது எப்படி எனவே மத்திய தொழில் பாதுகாப்புபடை பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *