• Fri. Apr 19th, 2024

இலவச எல்.கே.ஜி வகுப்புகளில் சேர..,ஒரு லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பம்..!

Byவிஷா

May 13, 2023

தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் இலவச கட்டாய உரிமை சட்டம் 2009ன்படி, இலவச எல்.கே.ஜி.வகுப்புகளில் சேர ஒரு லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர்.
தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009 இன் படி சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மட்டும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குழந்தைகள் 25 சதவீதம் இடங்களில் சேர 2003 ஆம் ஆண்டு அரசு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள 8,000 க்கும் அதிகமான தனியார் பள்ளிகளில் சுமார் ஒரு லட்சம் இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. தற்போது 2023-24 ஆம் கல்வியாண்டில் இலவச மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் அனைத்து பள்ளிகளிலும் பெறப்படுகின்றன.
இந்நிலையில் தனியார் பள்ளிகளில் இலவச எல்கேஜி வகுப்பில் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் ஒரு லட்சத்தை தாண்டி உள்ளது. கடந்த ஏப்ரல் இருபதாம் தேதி முதல் விண்ணப்பங்கள் கோரப்பட்ட நிலையில் எல்கேஜி இலவச வகுப்பில் சேர இதுவரை ஒரு லட்சத்து 11 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளது. இதில் தேர்வு செய்யப்படும் மாணவர்கள் விவரம் மே 24ஆம் தேதி வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *